Category Archives: தமிழ் வலைபூகள்

படித்ததில்-பிடித்தவை


*****************************

பொண்ணுங்களைப் பசங்க ரெண்டே வகையாத்தான் விவரிக்கிறார்கள்…

1.என்னா பொண்ணுடா அவ?

2.பொண்ணாடா அவ?

 

*****************************

 

பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்…

கணவர் பெயரோடு பேஸ் புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள்.

 

********************************

 

நான் எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை முன்னாள் செல்லும் ஸ்கூட்டியே நிர்ணயிக்கிறது..!

 

***************************

 

வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்.,

சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறேன்!

 

******************************

 

என்னது? மெழுகுவர்த்தியின் பயன்பாட்டை அதிகப் படுத்திய அம்மாவுக்கு,

இன்னும் மெழுகுச் சிலை வைக்கவில்லையா?

 

**********************************

 

நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில்  உங்களை  உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்!

 

**********************************

 

தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும்.

 

**************************************

 

வேலைவெட்டி இல்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன் வராத வரை.,

சம உரிமை என்பது வெறும் கூச்சல்!

 

**************************************

 

குளிரை அனுபவிக்கிறேன்னு ஊட்டியில போய் ஹீட்டர் போட்டு கிட்டு தூங்குபவனே மனிதன்!!!

 

**************************************

 

புத்தாண்டில் ஒன்றும் மாறப்போவதில்லை… என்பது திங்கட்கிழமை அலுவலகத்தில் கால் வைத்தவுடனே உரைத்துவிட்டது.!

 கடுப்பெத்துறார் மை லார்ட்…

 

****************************************

 

தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர்,

வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்?

 

***********************************

 

ரஜினி., சில படங்களில், ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிடுவார்!

அவர் மருமகன், உண்மையிலேயே, ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிட்டார்.

 

*************************************

 

பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல.

ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்.

 

**************************************

 

சென்னையில் நிழலுக்கு ஒதுங்குகிரவர்களை விட,

காதலுக்கு ஒதுங்குகிரவர்களே அதிகம்.

 

*****************************

வாழ்க்கையில், நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்…

பழிய யார் மேல போடலாம்னு…

 

********************************

 

வளர்ச்சி என்பது… அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி…

மானேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது.

 

*********************************

 

 கோபத்தை கட்டுபடுத்த , அது வரும்போது ஒன்னு முதல் பத்து வர தல கீழா என்னனுமாம். கேக்கும்போதே செம கோவம் வருது!

 

 ***********************************

 

தேர்வில்… தெரியாத விடைக்கு தலையை சொரிபவனை விட.,

முன்னிருப்பவனின் முதுகை சொரிபவனே தேர்ச்சியடைகிறான்!

 

***********************************

 

பொண்ணுங்க., நான் தூங்க போறேன்னு ஸ்டேடஸ் போட்டா கூட 100 கமண்ட்ஸ், 500 லைக் வருது.

ஆம்பளைங்க., நான் தொங்க போறேன்னு போட்டா… கயிறு இருக்கா இல்ல வாங்கி தரட்டா ன்னு தான் பதில் வருது.

 

***********************************

 

உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

உங்களாலேயே அதை இரகசியமாய் வைக்க முடியாத பொது, மற்றவர்களால் எப்படி முடியும்?

 

****************************************

 

உண்மையை உளறிவிட்டேனே என்கிற போதுதான் உண்மையிலேயே உளறிவிடுகிராய்!

 

****************************************

Advertisements

Happy Diwali இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


Diwali In Tirunelveli

வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய என் குறிப்புகள் (via நிறம்)


Nice article. Made me think about my childhood days of making paper boat and fan out of coconut tree leaves

வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய என் குறிப்புகள் (இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?] நாம் வாழ்கின்ற உலகின் அன்றாட நடவடிக்கைகள் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிட்டது. இதன் காரணமாக ஆசையாகப் பாவித்த பொருள்கள் பலவும், வழக்கொழிந்து போவதும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வழங்கொழிந்து செல்கின்ற பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும், அவர்களின் முன்னோர்கள் அன்றாடம் ஆ … Read More

via நிறம்

நீல வானம் நீயும் நானும் – மன்மதன் அம்பு பாடல் வரிகள்


நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பங்கு சந்தை குறியீட்டு எண்


National Stock Exchange of India

Image via Wikipedia

பங்குச் சந்தை பற்றிய சாமானியனின் பயத்திற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமானது இத்துறையில் புழங்கும் புரியாத வார்த்தைகள். மிரட்டும் இந்த வார்த்தைகளே, ‘இதுவொரு பெரிய விஷயம் போல’ என்ற மாயையை உண்டாக்கி விடுவது உண்மை.

உதாரணமாக சின்னத்திரை செய்தி முதல் தினசரிகளின் வணிகப் பக்கங்கள் வரை பங்குச்சந்தை என்றதும் குறிப்பிடப்படுவது, குறியீட்டெண் என்ற சமாச்சாரம்தான். ஒரு வரியில் சொல்வதானால் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தைக் காட்டும் அளவுகோல்தான் அது. ஆனால், இதுபற்றி தெளிவாக சொல்லப்படாததால் அது மிரட்டுகிறது. இக்குறியீட்டெண்ணை எப்படி கணக்கிடுகிறார்கள். அதன் உள்விவகாரங்கள் என்ன என்பதைப் பற்றி, இதுபோல பங்குச்சந்தையில் புழங்கும் இதர புதிய வார்த்தைகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகமானவர்களை பங்குச்சந்தை பக்கம் ஈர்க்க உதவும் என்று நம்புகிறேன்.

ஊடகங்கள் எல்லாவற்றிலும், குறியீட்டெண் என்ற அந்த இரண்டு.. மூன்று எண்களின் பட்டியலை வாசிப்பது சடங்காகிவிட்டது.அதில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ‘பி.எஸ்.இ. சென்ஸெக்ஸ்’ என்றும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் ‘நிப்டி’ என்றும் சொல்லப்படும். இவை தொடங்கிய வரலாறும்கூட கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான்.

318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் முதல் போட்டு 130 வருடங்களுக்கு முன் தொடங்கியதுதான் இந்தியப் பங்குச் சந்தையின் முதல் வித்து. இந்த வித்து விழுந்தது மும்பையில். அதாவது 1875ஆம் ஆண்டு இந்த வியாபாரிகள் போட்ட முதலீடு கால ஓட்டத்தில் இத்தனைப் பெரிய அமைப்பாக வளர்ந்து இன்று இந்திய அரசியல், மத்திய அரசு அதன் கொள்கைகளில் மாற்றங்களை உண்டாக்கவல்ல திறன் பெற்று நிற்கிறது. ஆரம்பித்த நாட்களில் இந்த வியாபாரிகளுக்கு அன்றிருந்த ஒரு சில நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில்… விற்பதில் மட்டும்தான் அக்கறை. ஆனால் பின்னாளில் மற்றவர்க்கும் இது பற்றித் தெரிந்து… நாமும் பணம் பண்ணிப் பார்க்கலாம் என்று முத்துக் குளிக்க மூழ்கியபோது இக்கலாச்சாரம் பரவி, பத்திரிகைகளில் பேசப்பட்டது.

அப்போது மும்பையில் விழுந்த முதல் விதை, கல்கத்தா, தில்லி, அகமதாபாத், சென்னை என பல இடங்களிலும் விழுந்துவிட்டு தன் இருப்பையும் விரிவாக்கிவிட்டன. அதன்பின், 1986ல் தான் குறியீட்டெண் என்ற இந்த அடையாளம் உருவானது. ஆனால் அந்நாளில் மற்ற பல இடங்களில் இருந்த விற்பனையை ஒன்று சேர்த்தாலும், அதைத் தாண்டி பல மடங்கு விற்பனை நடந்தது. மும்பை பங்குச்சந்தையில்தான். எனவே இங்கு விற்பனையான பங்குகளின் விலை அடிப்படையில் அமைத்தாலே அது உண்மையைப் பிரதிபலிக்கும் என்று. ‘பி.எஸ்.இ. சென்ஸெக்ஸ்’ (BSE Sensex – Bombay Stock Exchange Sensitive Index) என்றே இதை அழைத்தார்கள். இது தொடங்கிய காலத்தில் விற்பனையான முன்னணிப் பங்குகள் 30-ன் விலையை அடிப்படையாகக் கொண்டு இதைக் கணக்கிட்டார்கள்.

அது பற்றிய இன்னும் விரிவான தகவலுக்குச் செல்லும்முன், இதற்குப் பயன்படும் Market  Capitalization என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, XYZ  என்ற நிறுவனம் சந்தையில் பங்கு விற்பதாக வைத்துக் கொள்வோம். அன்று மும்பை பங்குச்சந்தையில் அதன் பங்கு ஒன்று, 100 ரூபாய்க்கு விற்கிறது. அன்றைய தினத்தில் அந்த நிறுவனத்தில் மொத்தமாக 1 லட்சம் பஙகுகள் இருப்பதாகக் கொண்டால் (அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை) அந்த நிறுவனத்தில் Market Capitalizaion = 100X1 லட்சம் = 1 கோடி. வேறுவிதமாகச் சொல்வதானால், ஒரு பங்கு 100 ரூபாய்க்கு விற்பதால், நம்மிடம் 1 கோடி ரூபாய் இருந்தால், அந்த நிறுவனத்தில் எல்லா (1 லட்சம்) பங்குகளையும் நம்மால் விலைக்கு வாங்கிவிட முடியும். அதன் மூலம் அந்த நிறுவனத்தின் தனி முதலாளியாக நாம் ஆகிவிட முடியும். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கிவிட… தேவைப்படும் மொத்தப் பண மதிப்புதான் அந்நிறுவனத்தின் Market Capitalizaion எனப்படுகிறது.

எவ்வாறு பல நிறுவனங்களின் ‘மார்க்கெட் கேப்பிடலைசேஷன்’ ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து அன்றைய தினம் பங்குச்சந்தையில் எவ்வளவு பணம் புழங்கியது என்று கணக்கிட முடிகிறது.எனவே ‘மார்க்கெட் கேப்பிடலைசேஷன்’ அல்லது ‘மார்க்கெட் கேப்’ என்று குறிப்பிடப்படும் இந்தத் தகவல்தான் முக்கியம். முதன்முதலில் பங்குச்சந்தைக் குறியீட்டெண் இப்படி கணக்கிட்டது 1978-79 நிதியாண்டின் சராசரி பங்கு விலைகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன. அவற்றை, உத்தேசமாக நூறு புள்ளிகள் என்ற அடிப்படை ஆரம்ப மதிப்புக்கு ஒப்பிட்டு, கணக்கைத் தொடங்கினார்கள். இன்று ‘4000 புள்ளியை எட்டியது. 50 புள்ளிகள் சரிந்தது’ என்று சொல்வதெல்லாம் இந்த நூறு புள்ளியில் தொடங்கியதுதான்.

முன்னணியில் இருந்த முப்பது பங்குகள் மட்டும் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னாளில் அர்த்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் பங்குகளைப் பரிசீலிக்க வேண்டியிருப்பது உணரப்பட்டது. எனவே முப்பது என்ற எண்ணிக்கையை நூறு என உயர்த்திக்கொண்டு, முன்னணி நூறு நிறுவனங்களின் Market Capitalizaion-ஐ, வைத்து இன்னொரு புதிய குறியீட்டெண்ணைக் கணக்கிட்டார்கள். இது 1989-ல் தொடங்கியது. ஆனால் இது தேசிய அளவில், அதாவது – பங்குச் சந்தை கால்பரப்பிய மற்ற இடங்களில் விற்பனை தொடங்கிய இதர நிறுவனங்களின் நிலவரங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணியதால் மும்பை சந்தையுடன், கல்கத்தா, தில்லி, அகமதாபாத் மற்றும் சென்னை பங்குச் சந்தைகளில் பதிவு பெற்ற பங்குகளின் மார்க்கெட் கேப்பிடலைசேஷனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதில் முன்னணி நூறு நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டார்கள். இதற்கு, 1983-ம் ஆண்டில் அவற்றின் சராசரி விலையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, புதிய குறியீட்டெண் கணக்கிடப்பட்டது. ஆரம்பத்தில், இதை ‘தேசிய குறியீட்டெண்’ என்று சொல்லி வந்தாலும், 1996 அக்டோபர் 14இல் இது தனது பெயரை ‘பி.எஸ்.சி.100 (BSE – 100)என மாற்றிக் கொண்டது.

னால் இந்த மாற்றமும் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை. அதாவது சந்தையில் பஙகுகளின் விலையை, அவற்றின் போக்கை மிகச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. எனவே மேலும் பரவலாக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு 1994 மே 27 அன்று, புதிதாக இரு குறியீட்டெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அவை முறையே BSE – 200 என்றும், Dollex – 200 என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்னொரு பக்கம் முன்னணியில் இருக்கும் கம்பெனிகள் தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்லை. அல்லது முடியவில்லை என்பதால், குறியீட்டெண் கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிறுவனம் எவை என்ற பட்டியலிலும் மாற்றங்கள் வரத் தொடங்கின.

இந்த கணக்குமுறை 2003 செப்டம்பரில், அடுத்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றம் இன்று உலக அளவில் பெரும்பாலான இடங்களில் பங்குச்சந்தை குறியீட்டெண் கணக்கிடும் முறையைப் போன்றது. ஒரு நிறுவனத்தில் எல்லாப் பங்குகளும் பங்கு வர்த்தகத்தில் பங்கேற்பதில்லை. உதாரணமாக, ரிலையன்ஸ், டாடா, பிர்லா நிறுவனங்களைத் தொடங்கியவர்கள் அவர்களது நிறுவனத்தில் பங்குகளில் கணிசமானவற்றை நிரந்தரமாக தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்நிறுவனப் பங்குகளை பெருமளவில் வாங்கி வைத்திருக்கும் LIC போன்ற நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள், நிறுவன முதலாளிகளுக்கு நெருக்கமானவர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை சந்தையில் அன்றாட விற்பனைக்கு விடுவதில்லை.
பெரும்பாலான நாட்களில் அவை முடங்கித்தான் கிடக்கின்றன. அவை சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தில் எந்த வகையிலும் பங்களிப்பதில்லை. எனவே அவற்றை குறியீட்டெண் கணக்கிடும்போது முழு அளவு ஈடுபாடு கொண்டவை என எடுத்துக்கொள்ள வேண்டாம். சந்தைக்கு வந்துபோய், விலை ஏற்ற, வீழ்ச்சியில் பங்களிக்கும் அந்நிறுவனப் பங்குகளின் அளவை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்ற யோசனைதான் இது. இவ்வாறு தொடர்ந்து பங்களிக்கும் அளவை Free floated பங்குகள் என்று வகைப்படுத்தி அவற்றின் அளவை கணக்கிட்டு அதன்படி நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன், குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய நிலையில் இந்தக் குறியீட்டெண்களை பங்குச்சந்தைகளே பங்கு வர்த்தகம் நடைபெறும் நேரத்திலும்கூட 15 நொடிக்கு ஒருமுறை கணக்கிட்டு அறிவித்து விடுகின்றன. அவற்றைத்தான் மற்ற ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
இப்படியே ஏற்பட்ட ஒரு பக்க வளர்ச்சிக்கு மறுபுறம், கணினியின் பயன்பாடு அதிகரித்தபோது முதலில் மும்பை பங்குச்சந்தை ஆன்லைன் வர்த்தகம்  (BLOT)  என்பது அறிமுகமானது. இன்னொரு பக்கம்  OTC என்ற பெயரில் Over the Counter exchange of India என்ற இன்னொரு பங்குச்சந்தை உருப்பெற்றது. ஆனால் அதையும் தாண்டிய முன்னேற்றஙகளுடன் உருவான தேசிய பங்குச்சந்தை   (National Stock Exchange)  இன்று நாட்டின் எந்த பகுதியில் இருந்துகொண்டும் கம்ப்யூட்டரின் வழியாகவே பங்கு விலைகளைப் பார்த்து வணிகத்தில் ஈடுபடலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டதால் மும்பை பங்குச்சந்தையே மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது

.
மும்பை பங்குச்சந்தைப் போலவே, தேசிய பங்குச்சந்தையும் தனக்கென தனியான குறியீட்டெண்களைக் கொண்டுள்ளது.
அதோடு, ஒரு குறிப்பிட்ட துறை, குறிப்பிட்ட இலக்கு கொண்ட நிறுவனங்களில் மட்டும் முதலிட விரும்புபவர்களின் தேவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு இன்று                   S & P CNX NIFTY JUNIOR. S & P CNX DEFTY.  CNX IT, S & P CNX 500, CNX MIDCAP 200 என்று பல குறியீட்டெண்கள் வழக்கத்துக்கு வந்துள்ளன. எனினும் இவை பற்றிய நுணுக்கமான தகவல்கள் இத்துறையை ஆழமாக அணுகுபவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படும்.

 

நன்றி: நட்பு (தமிழ் சமூகத்தின் இணைய முகம்) http://www.natpu.in

 

%d bloggers like this: