Category Archives: தமிழ் பதிவு

படித்ததில்-பிடித்தவை


*****************************

பொண்ணுங்களைப் பசங்க ரெண்டே வகையாத்தான் விவரிக்கிறார்கள்…

1.என்னா பொண்ணுடா அவ?

2.பொண்ணாடா அவ?

 

*****************************

 

பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்…

கணவர் பெயரோடு பேஸ் புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள்.

 

********************************

 

நான் எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை முன்னாள் செல்லும் ஸ்கூட்டியே நிர்ணயிக்கிறது..!

 

***************************

 

வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்.,

சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறேன்!

 

******************************

 

என்னது? மெழுகுவர்த்தியின் பயன்பாட்டை அதிகப் படுத்திய அம்மாவுக்கு,

இன்னும் மெழுகுச் சிலை வைக்கவில்லையா?

 

**********************************

 

நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில்  உங்களை  உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்!

 

**********************************

 

தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும்.

 

**************************************

 

வேலைவெட்டி இல்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன் வராத வரை.,

சம உரிமை என்பது வெறும் கூச்சல்!

 

**************************************

 

குளிரை அனுபவிக்கிறேன்னு ஊட்டியில போய் ஹீட்டர் போட்டு கிட்டு தூங்குபவனே மனிதன்!!!

 

**************************************

 

புத்தாண்டில் ஒன்றும் மாறப்போவதில்லை… என்பது திங்கட்கிழமை அலுவலகத்தில் கால் வைத்தவுடனே உரைத்துவிட்டது.!

 கடுப்பெத்துறார் மை லார்ட்…

 

****************************************

 

தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர்,

வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்?

 

***********************************

 

ரஜினி., சில படங்களில், ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிடுவார்!

அவர் மருமகன், உண்மையிலேயே, ஒரே பாடலில் பெரிய ஆளாகிவிட்டார்.

 

*************************************

 

பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல.

ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்.

 

**************************************

 

சென்னையில் நிழலுக்கு ஒதுங்குகிரவர்களை விட,

காதலுக்கு ஒதுங்குகிரவர்களே அதிகம்.

 

*****************************

வாழ்க்கையில், நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்…

பழிய யார் மேல போடலாம்னு…

 

********************************

 

வளர்ச்சி என்பது… அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி…

மானேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது.

 

*********************************

 

 கோபத்தை கட்டுபடுத்த , அது வரும்போது ஒன்னு முதல் பத்து வர தல கீழா என்னனுமாம். கேக்கும்போதே செம கோவம் வருது!

 

 ***********************************

 

தேர்வில்… தெரியாத விடைக்கு தலையை சொரிபவனை விட.,

முன்னிருப்பவனின் முதுகை சொரிபவனே தேர்ச்சியடைகிறான்!

 

***********************************

 

பொண்ணுங்க., நான் தூங்க போறேன்னு ஸ்டேடஸ் போட்டா கூட 100 கமண்ட்ஸ், 500 லைக் வருது.

ஆம்பளைங்க., நான் தொங்க போறேன்னு போட்டா… கயிறு இருக்கா இல்ல வாங்கி தரட்டா ன்னு தான் பதில் வருது.

 

***********************************

 

உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

உங்களாலேயே அதை இரகசியமாய் வைக்க முடியாத பொது, மற்றவர்களால் எப்படி முடியும்?

 

****************************************

 

உண்மையை உளறிவிட்டேனே என்கிற போதுதான் உண்மையிலேயே உளறிவிடுகிராய்!

 

****************************************

Advertisements

நீல வானம் நீயும் நானும் – மன்மதன் அம்பு பாடல் வரிகள்


நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

ஸ்பெக்ட்ரம் மறைக்கப்படுகிற சில உண்மைகள்


சி.ஏ.ஜி. அறிக்கையின் முன்னுரையில் 2003-04 முதல் 2009-10 வரை கணக்குத் தணிக்கை செய்யப்பட்டுள்ளதா

"A. Raja"

கக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2008-10 வரைதான் கணக்குத் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.  2003-07 வரையுள்ள ஆண்டுகளின் கணக்கு ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? இதற்கு ஏதாவது உள்நோக்கம் உள்ளதா?

1994இல் அறிவிக்கப்பட்ட தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கையின்படி ஏலமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அப்படி ஏலம் எடுத்த ஒரு சிலர் அந்தப் பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுகி, ‘எங்களால் தொலைபேசி இணைப்புகளையும் அதிகரிக்க முடியவில்லை. வருமானத்தையும் பெருக்க முடியவில்லை” என்று முறையிட்டனர். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம் புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. இதன்படி ஏலமுறை தோல்வியடைந்துவிட்டது!

1994இல் இந்தியா முழுவதும் ஒரு நிமிடம் பேச ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அப்போது தொலைபேசி

இணைப்புகளின் எண்ணிக்கை 30 லட்சம்தான்.

1999இல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோதுதான் புதிய தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி ஏலமுறை நீக்கப்பட்டு, முதலில் வருவோர்க்கு முன்னுரிமை (First Come First Served Basis)  அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் பிரமோத் மகாஜன்.
1999இல் தொலைத்தொடர்புக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது, மொத்தத் தொலைபேசி இணைப்புகள் 1.6 கோடி. இந்தியா முழுவதும் ஒரு நிமிடம் பேச கட்டணம் ரூ.16.
தொலைபேசிக் கட்டணங்கள்(எஸ்.டி.டி. ஒரு நிமிடம் பேச):1995 – ரூ. 30, 2002 – ரூ.16.60, 2003 – ரூ.3, 201

0 – ரூ. 0.40.
செல்பேசிக் கட்டணங்கள் (இந்தியா முழுவதும் ஒரு நிமிடம் பேச) ;
2002 – ரூ.16-32, 2003 – ரூ. 16-32; 2010 – ரூ.0.30 (குறைந்தபட்சமாக).

தொலைபெசி, செல்பேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை:
மார்ச் 1995 –  30 லட்சம்
1999 –  1 கோடி 60 லட்சம்
2003 –  28 கோடி
2008 –  30 கோடி
2009 –  43 கோடி
2010  –  62 கோடி
நவம்பர் 2010   –   73 கோடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்த உரிமக் கட்டணமும் ஸ்பெக்ட்ரம் கட்டணமும்: 2002-03 – 5,467 கோடி ரூபாய்
2007-08 – 11,910 கோடி ரூபாய்
2008-09 – 13,214 கோடி ரூபாய்
2009-10 – 13,588 கோடி ரூபாய்

தொலைத்தொடர்பின் அடர்த்தி (Tele Density)  (ஆயிரத்திற்கு):
2001 – 10.37 சதவிகிதம் 2004 – 14.32 சதவிகிதம்
2008 – 26.22 சதவிகிதம்
2009 – 88.34 சதவிகிதம்
2010 – 110.69 சதவிகிதம்

1999இல் வெளிவந்த தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கையின்படி 2010க்குள் ஆயிரத்திற்கு 15 இணைப்புகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2010இல் 110.69 சதவிகித தொலைத் தொடர்பின் அடர்த்தியை எட்டியுள்ளது மகத்தான சாதனையாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமக் கட்டணமாக முதலில் ஒரு தொகையைச் செலுத்திவிட்டு உரிமத்தைப் பெற்ற பிறகு அந்நிறுவனம் பெறுகிற வருமானத்தில் ஒரு பகுதியைத் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும். இதன்படி ஒரு தொலைபேசி தொடர்புக்கு மூன்றிலிருந்து நான்கு பைசா தொலைத்தொடர்புத்துறைக்குத் தொடர்ந்து செலுத்த வேண்டும். இதுதான் ‘ஸ்பெக்ட்ரம் கட்டணம்’ என்று கூறப்படுகிறது. ஆனால், ஏலமுறையில் ஒரு தொகையைச் செலுத்திவிட்டு அதற்குப் பிறகு எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

மத்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.இராசா மே 2008இல் பொறுப்பேற்றபோது, மொத்தத் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 30 கோடிதான். ஆனால், அவர் பதவி விலகும்போது, நவம்பர் 2010இல் 73 கோடியாக உயர்ந்தது.

2007இல் இந்தியா முழுவதும் செல்பேசியில் ஒரு நிமிடம் பேச 1 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆ.இராசா பதவி விலகிய போது ஒரு நிமிடம் பேசக் கட்டணம் 30 பைசா!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல உண்மைகளை ஊடகங்கள் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு மூடிமறைத்து அவதூறாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் நிறைய உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆரோக்கியமான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தயாராக உள்ளன. இதைப் பிரதமரும் பல முறை அறிவித்துவிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினர் ஒரே பிடிவாதமாகப் போகாத ஊருக்கு வழிதேடுகிற வகையில், “நாடாளும்ன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும்” என்று கூறுகின்றனர்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அரசியல் மேடையாக்கி, முறையான விசாரணை நடத்தாமல் அவதூறு பிரச்சாரத்தை ஊடகங்கள் துணையோடு நடத்த பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் முனைவது ஜனநாயகத்திற்கே விடப்படுகிற சவாலாகும். இதுவரை 13 (இன்றுவரை நீடித்துள்ளது) நாள்கள் நாடாளுமன்றம் நடைபெறாமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.100 கோடிக்குமேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ. 100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதுகுறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

தண்ணீர் பஞ்சம்


தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்:
1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் 😦
2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.
3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால நான் நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்.
4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்…. சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.
5. ராமு: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு
சோமு: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா… அதுக்கு நான் எங்க போவேன்? (அழுகிறார் சோமு)
(”ராமு – சோமு”  பப்பு திருப்தியா?)
6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.
தண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்:
1.‘தண்ணியில கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.
2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது? மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது! 
3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி… )
நிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.

நவீன திருக்குறள்


thiru

%d bloggers like this: